திண்டுக்கல் : திண்டுக்கல் கோவை குனியமுத்தூர் பகுதியில் சபரிநாதன் (30), என்பவரை கிறிஸ்டோபர் (26), ஆரோக்கியராஜ் (25), ஆகிய 2 பேர் கத்தியால் குத்தி விட்டு சரக்கு வாகனத்தில் சொந்த ஊரான நெல்லைக்கு புறப்பட்டு வந்தனர். இது குறித்து கோவை போலீசார் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பிக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட S.P.பாஸ்கரன் உத்தரவின்பேரில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது வந்த சரக்கு வாகனத்தை நிறுத்திய போது அவர்கள் தப்பி ஓட முயன்றனர். இருந்தபோதும் போலீசார் அவர்களை துரத்திச்சென்று மடக்கியபோது கோவையில் தொழிலாளியை குத்திவிட்டு தப்பிவந்தவர்கள் என உறுதியானது. இதனைதொடர்ந்து குனியமுத்தூர் போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்து கிறிஸ்டோபர் மற்றும் வினித்தை ஒப்படைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.