மதுரை: மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் முதலைகுளம் ஊராட்சி கீழப்பட்டி கிராமத்தில் நடு முதலைக்குளம் குளத்துப்பட்டி கீழப்பட்டி பல்லாக்கு ஒச்சா தேவர் இரண்டு தேவர் வகையறா மற்றும் கிராம பொது மக்களுக்கு பாத்தியப்பட்ட அங்காளம்மன் ஸ்ரீ ஒச்சாண்டம்மன் கோவில் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ நிவாச நரசிம்ம சர்மா தலைமையான சிவாச்சாரியார்கள் வெள்ளிக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை உடன் முதலாம் காலை யாக சார் நிகழ்ச்சிகள் தொடங்கினார்கள். சனிக்கிழமை இரண்டாம் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை மங்கள இசை உடன் விக்னேஸ்வர பூஜை உடன் நான்காம் கால யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கி பூர்ணாஹூதியுடன் நிறைவுற்றது.
தொடர்ந்து கடம் புறப்பாடாகி திருக்கோவிலை சுற்றி வலம் வந்து கும்பத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. வராகி தொடர்ந்து பரிவார தெய்வங்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட தீர்த்தக் குடம் ஊர்வலம் நடைபெற்றது தொடர்ந்து பால் தயிர் வெண்ணை மஞ்சள் பொடி மா பொடி திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. ஒலி ஒளி அமைப்பு இரவு சூரியன் எம். கருப்பையா ஆடியோ நடு முதலைக்குளமும் கும்பாபிஷேக ஏற்பாடுகளை கீழப்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி















