மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட குட்லாடம்பட்டி பகுதி அருகே அண்ணாமலையார் கோவிலில் கடந்த மாதம் சிலைகள் திருடு போனது,
இந்த சம்பவம் தொடர்பாக வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில் ,
வாடிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராதா மகேஷ் அவர்கள் தலைமையிலான S.I திரு.முருகேசன் மற்றும் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, தனிச்சியம் கண்மாய் பகுதி அருகே சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த நபர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் குட்லாடம்பட்டி பகுதியில் சிலை திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
மேலும் கண்மாய் பகுதியில் மறைத்து வைத்திருந்த சிலைகளையும் எடுத்துக் கொடுத்தனர் .
மேலும் விசாரணையில் அவர்கள் திருச்செந்தூர் அருகே உள்ள வடக்கு ஆத்தூரை சேர்ந்த முகம்மது மைதீன் , அகிலன், துரை, அபிலேஷ் குமார், கேசவன், உசிலம்பட்டியை சேர்ந்த சின்னண்ணன் என்பது தெரியவந்தது .
இதனை தொடர்ந்து வாடிப்பட்டி போலீசார் அனைவரையும் கைது செய்து சிலைகளை மீட்டனர்…