திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், தளபதி சமுத்திரம் கீழுரை சேர்ந்தவர் அனந்த லட்சுமி. (56). இவர் அதே பகுதியை சேர்ந்த வீர நங்கை அம்மன் கோவில் நிர்வாகியாக உள்ளார். கடந்த 11ஆம் தேதி இரவு கோவில் அம்மன் கழுத்தில் இருந்த இருந்த தங்க தாலி மற்றும் தங்க பொட்டுக்கள், மற்றும் கோவிலில் இருந்த விளக்குகள் உட்பட களவு போய் உள்ளது என்று ஏர்வாடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர், சுதா மேற்பார்வையில் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து கன்னியாகுமரி மாவட்டம் அமராவதி விளையைச் சேர்ந்த அந்தோணி பிரகாஷ்(32). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்