திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருள்மிகு பாபநாசசாமி திருக்கோயில், மகா கும்பாபிஷேக விழா 19 ஆண்டுகளுக்குப் பின் (04.05.2025) அன்று நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு தமிழகம் முழுவதுமிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யவும், போக்குவரத்து நெரிசல் மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன், இ.கா.ப., தலைமையில், சுமார் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும் அறிவுரைகளையும் வழங்கினார்.
ருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்