தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரையன்ட்நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கோவில் நிர்வாகியான தங்கபாண்டி மகன் இசக்கிபாண்டி (46). என்பவர் (07.12.2025) இரவு கோவிலை பூட்டிசென்று காலை வந்து திறந்து பார்க்கும்போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடு போனது தெரியவந்துள்ளது. இது குறித்து இசக்கிபாண்டி அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் விஜயகுமார் (19). என்பவர் மேற்படி கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்து ரூபாய் 10 ஆயிரம் பணத்தை திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் குற்றவாளி விஜயகுமாரை கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 10,000/- பணத்தையும் மீட்டனர்.
















