கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் பாலதொட்டனப்பள்ளி கிராமத்தில் சுரேஷ் என்பவர் குடியிருந்த வருவதாகவும் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் குற்றவாளி குடிப்பதற்கு பணம் இல்லை என்று (12.05.2025) ஆம் தேதி விடியற்காலை 04.00 மணிக்கு பாலதொட்டனப்பள்ளியில் உள்ள மத்தூரம்மா கோவிலில் சிமெண்ட் ஜன்னலை உடைத்து கோவிலில் உள்ளே இருந்த சூலத்தால் உண்டியலை உடைக்க முயற்சி செய்து முடியாததால் அப்படியே விட்டு சென்றதை தெரிந்து குற்றவாளியை பிடித்து வைத்து தளி காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லி சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து கோவிலில் திருட முயன்ற நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர், சுரேஷ் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்