தூத்துக்குடி: கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. மாரியப்பன் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. அர்ஜுனராஜ் மற்றும் போலீசார் (03.03.2026) கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கரலிங்கபுரம் to மூப்பன்பட்டி ரோட்டில் உள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கோவில்பட்டி சங்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர்களான சேதுபதி பாண்டியன் (22). பாலமுருகன் (23). மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 2 இளஞ்சிறார்கள் என்பதும் அவர்களிடம் 3 அரிவாள்கள் இருந்ததும் தெரியவந்தது.
இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி நபர்களிடமிருந்து 3 அரிவாள்களை பறிமுதல் செய்து, மேற்படி நபர்களில் சேதுபதி பாண்டியன் மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரை கைது செய்தும், 2 இளஞ்சிறார்களை திருநெல்வேலி அரசு கூர்நோக்கு இல்லத்திலும் ஒப்படைத்தனர். மேற்படி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு துரிதமாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
















