கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு சுந்தரவதனம் IPS அவர்கள் கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்ட எல்லைக்குள் வரும் கோழி கழிவு, மற்றும் மருத்துவ கழிவு கொண்டுவரும் வாகனங்களை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்கள். உத்தரவின் படி (01-11-2024) வாகன சோதனையின் போது களியக்காவிளை காவல் நிலைய எல்லைக்குள் கோழி கழிவு எற்றிவந்த வாகனத்தை பறிமுதல் செய்து களியக்காவிளை காவல் நிலையத்தில் 123, 271,272, BNS ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோழி கழிவு மற்றும் மருத்துவ கழிவு கொண்டுவரும் வாகனங்கள் மீதும், அதன் உரிமையாளர் ஓட்டுநர்கள் மீதும் இந்நடவடிக்கையானது மேலும் தீவிர படுத்தப்படும் என எச்சரிக்கபடுகிறது.