திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாட்சியை சேர்ந்த செந்தில்நாதன்(55) இவர் அப்பகுதியில் தோட்டத்தில் தகர மேற்கூரை அமைத்து, அதில் கோழிகளை வளர்த்து வந்தார். இந்தநிலையில் அவரது கோழிப்பண்ணையில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றியும், மண்ணை கொட்டியும் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவி அருகில் இருந்த வைக்கோல் படப்பிலும் பற்றிக்கொண்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி பண்ணையிலும், வைக்கோல் படப்பிலும் எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் பண்ணையில் வளர்ப்பதற்காக விடப்பட்டிருந்த 2 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி செத்தன. அதேபோல் வைக்கோல் படப்பும் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா