மதுரை : மதுரை கருப்பாயூரணி, செந்தமிழ் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில், கோயில் நிர்வாகம் சார்பில், சுற்றுச்சூழலை வலியூறுத்தி, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இவ் விழாவிற்கு, செந்தமிழ் நகர் குடியிருப்போர் நலச்சங்க தத்தின் தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். செயலாளர் சபரி நிவாஸ் முன்னிலை வகித்தார்.பொருளாளர் ராசமாணிக்கம், மரக்கன்றுகளை நடவு செய்தார். கோயில் நிர்வாகக் குழுவினர் மற்றும் பிரமுகர்கள் ரவீந்திரன், துணைத் தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் கோயிலை சுற்றி மரக்கன்றுகளை நட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















