தேனி: அழகுமலையான் திருக்கோவிலில் கோவில் கதவு உடைக்கப்பட்டு கோவிலுக்குச் சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இதனை அடுத்து கோவில் அறங்காவலர்கள் தென்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். தேனி மாவட்ட எஸ்.பி. திரு.பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் அடிப்படையில், பெரியகுளம்துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் மேற்பார்வையில், தென்கரை காவல் ஆய்வாளர்கள் திரு.சுகுமாறன், திரு.ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடப்பட்டது.
இதில் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில், பெரியகுளம் பகுதியைச் சார்ந்த புவனேஸ்வரன் 22, ஜெயச்சந்திரன் 22, பிரதாப் சிங் 20, அந்தோனிசாமி 22, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 2 லட்சம் மதிப்பிலான தங்கம், மற்றும் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது. .சார்பு ஆய்வாளர்கள், திரு..மணிகண்டன் திரு.திவான் மைதீன் உள்ளிட்டவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.