சென்னை : சென்னை மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற 41ஆவது அகில இந்திய காவல்துறை குதிரையேற்ற சாம்பியன்ஷிப் மற்றும் குதிரையேற்ற காவல்துறைக்கான போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின், அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் /படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.