திருநெல்வேலி: திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகம். கீழநத்தம், வெள்ளிமலை அருகே கடந்த 2017 ஆம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த, மணப்படைவீட்டைச் சேர்ந்த பாக்கிய பிரகாஷ் (28). என்பவரிடம், பணம் மற்றும் செல்போன் கொள்ளையடித்த குற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, கைது செய்யப்பட்டு திருநெல்வேலி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் குற்றவாளிகளான ராஜவல்லிபுரத்தை சேர்ந்த நிஷாந்த் (31). (சரித்திர பதிவேடு குற்றவாளி) மதிபாலன் (31). கீழப்புத்தனேரி சேர்ந்த ஆறுமுகராஜ் (27). துறையூரை சேர்ந்த ஆனந்த் (27). ஆகிய நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதால் நீதிமன்றம் (17.11.2025) அன்று குற்றவாளிகளுக்கு கூட்டுக் கொள்ளை குற்றத்திற்காக 7 வருடங்கள் கடுங்காவல் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில், திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதி ராஜா, காவல் ஆய்வாளர்கள், சசிகுமார், சரஸ்வதி (தற்போது தென்காசி மாவட்டம்) மற்றும் தாலுகா காவல்துறையினரையும், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப, வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















