இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 24/2026 கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர துப்பறியும் பணிகளில் ஈடுபட்டனர். காவல் சார்பு ஆய்வாளர் தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டு, அப்பகுதிகளில் உள்ள CCTV கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி பகுதியில் பதுங்கியிருந்த மாந்தா @ மகேந்திரன் மற்றும் அன்புமணி ஆகிய இருவரை கைது செய்தனர். சிறப்பாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ் IPS அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
















