திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் அய்யாசாமி நகரைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம் 55. கடந்த மாதம் 29-ந்தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மற்றும் 21 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார்சைக்கிளை நிறுத்தினர். அப்போது அவர்கள் நிற்காமல் சென்றனர். அவர்களை துரத்திப்பிடித்த போது அந்த மோட்டார்சைக்கிள் எண்ணும், கண்காணிப்பு கேமராக்களில் திருட்டுச் சம்பவத்தின்போது பதிவாகியிருந்த மோட்டார்சைக்கிள் எண்ணும் ஒரே எண் எனத்தெரிய வந்தது. இதையடுத்து அவரை காங்கயம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவரது பெயர் மணிகண்டன் 21. உள்ள வெள்ளமடை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார் அவர்கள் அங்கு பதுக்கி வைத்திருந்த 7½ பவுன் நகைகளை மீட்டனர். மீதி நகைகள் மற்றும் பணம் ஆகியவை செந்தில்குமாரிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார். மகன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது தந்தை செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.