இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 24/2026 கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில், காவல் சார்பு ஆய்வாளர் தலைமையில் போலீசார் தீவிரமாக செயல்பட்டனர். பல்வேறு இடங்களில் துப்பறியும் பணிகளில் ஈடுபட்டு, குறிப்பாக CCTV கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொண்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த விசாரணையின் அடிப்படையில், கிருஷ்ணகிரி பகுதியில் பதுங்கியிருந்த மாந்தா @ மகேந்திரன் மற்றும் அன்புமணி ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சிறப்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜி. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி
















