தூத்துக்குடி: சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லாரி ஓட்டுநரை தாக்கிய கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த அஸ்வின் ஜெயக்குமார் (20). காமராஜ் (18). மற்றும் வேல்முருகன் (19). ஆகியோர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. தனசேகரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை.சிலம்பரசன் அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி 3 குற்றவாளிகள் (01.02.2026) தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
















