இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 20/2026 கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர துப்பறியும் பணிகளில் ஈடுபட்டனர். காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டு, அப்பகுதிகளில் உள்ள CCTV கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் அடிப்படையில் மேலூர் பகுதியைச் சேர்ந்த தினகரன் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 2 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். சிறப்பாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்த காவல்துறையினரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ் IPS அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
















