திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி பஜாரில் ஜெசிந்தா மேரி என்பவர் ஜவுளிக்கடையுடன் இணைந்து நகை அடகுக்கடையும் நடத்தி வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவரது அடகு கடை லாக்கரில் இருந்த சுமார் 250 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூபாய் 3 லட்சம் கொள்ளை போனது. இது சம்பந்தமாக மூலைக்கரைப்பட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., நேரடி கண்காணிப்பில் நாங்குநேரி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார், இ.கா.ப. தலைமையில், களக்காடு காவல் ஆய்வாளர், கண்ணன். நாங்குநேரி குற்றப்பிரிவு ஆய்வாளர், ராஜகுமாரி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி ரெட்டார்குளத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 137 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்து நகைகளை மீட்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்