திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் குமரஞ்சேரி அருள்மிகு குமாரசாமி கோவிலில் நான்கு பேர் கொண்ட கும்பல் வெல்டிங் மிஷின் மூலம் அறுத்து உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயற்சித்து கருவறை பூட்டை உடைக்க முடியாததால் அங்கிருந்த ஒலிபெருக்கியை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர் கோவில் உண்டியல் பணம் பூஜை பொருட்கள் தப்பியது சிசிடிவி கேமரா பதிவை கொண்டு கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். நேற்று தைப்பூசம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகளவு வந்த நிலையில் கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இக்கோவிலில் நான்கு முறைக்கு மேல் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற நிலையில் காவல்துறையினர்
உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு