திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வண்ணிப்பாக்கம் ஊராட்சி சாணார்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் வள்ளி (45). இவரது கணவர் ராஜேந்திரன் (43) வெல்டிங் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று விட்டார் . இவரது மனைவி ஊராட்சியில் உள்ள நூறு நாட்கள் செய்யும் பணியில் சென்று விட்டு மதியம் 3 மணிக்கு வீடு திரும்பிய போது வீடு திறந்து கிடந்தது வீட்டில் இருந்த ரொக்கப்பணம் 35 ஆயிரம் காணவில்லை இது குறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்தை சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல் மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீமாபுரம் காலனியில் ஒருவர் நேருதாஸ்.(40). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் இவரது மனைவி சுஜாதா 100 நாள் வேலைக்கு சென்று இருந்தார். மகள் பள்ளிக்கு சென்று விட்டார். 100 நாட்கள் பணி முடிந்து வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது வீட்டிலிருந்த ரொக்க பணம் 5000 ரூபாய் காணவில்லை இது குறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார் போலீசார் சம்பவ இடத்தை சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் . இரண்டு கொள்ளை சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு