திண்டுக்கல்: திண்டுக்கல், மேட்டுப்பட்டி டீச்சர்ஸ் காலனி பகுதியில் அமலா தீபன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தொடர்பாக நகர் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதே போல் மொட்டணம்பட்டி, ரோட்டில் இன்ஸ்பெக்டர் வீட்டில் மற்றும் அதே பகுதியில் மூதாட்டியின் வீட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது தொடர்பாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் ASP.சிபின் மேற்பார்வையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில், சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு திண்டுக்கல் அசனாத்புரம் பகுதியை சேர்ந்த சிக்கந்தர்சேக்ஒலி(24). சகாயராஜ் (எ) அஜித்(24). அப்துல்ரகுமான்(20). ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடித்த பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா