சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் கடந்த மாதம் 29 ந் தேதி சிதம்பரம் என்பவரின் வீட்டில், பெட்டகம் மற்றும் பீரோவை உடைத்து 49 பவுன் தங்க நகைகள், 22 கிலோ 800 கிராம் வெள்ளி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதனை அடுத்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடிப்பதற்கு காவல் துறை துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவின் படி, திருக்கோஷ்டியூர் காவல் ஆய்வாளர் செல்வராகவன் தலைமையில், சக்திவேல், ராஜவேல், ஆகியோர் 2 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனிப்படையினர் கடந்த இரண்டு வாரங்களாக குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில் தென்மாபட்டு பிரிவு ரோட்டில் சென்ற 2 நபர்களை பிடித்து விசாரித்ததில் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியதை அடுத்து, அவர்களிடம் போலீசார் கிடக்கு பிடி விசாரணையை மேற்கொண்டனர்.
அப்போது, தேனியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் சோனி ராஜா (58). மற்றும் மதுரை செக்கானூரணியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகன் அழகர்சாமி (35). ஆகியோர் கண்டாரமாணிக்கத்தில் நடைபெற்ற திருட்டில் ஈடுபட்டது. தெரிய வந்தது. இதனை எடுத்து இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் இவர்கள் திருடிச் சென்றதில் 43 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 கிலோ வெள்ளி பொருட்களை மீட்டனர். இந்நிலையில் சோனி ராஜா மீது கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் 140 – வழக்குகள் பதிவாகி உள்ளது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை இரண்டு வாரங்களில் பிடித்த சிறப்பு தனிப்படை போலீசார் தனிப்படையினர் சக்திவேல், ராஜவேல், சிறப்பு சார்பு ஆய்வாளர் முத்துராஜ் மற்றும் காவலர்கள் ஜெகதீஷ், ஜெயராஜ், ரமேஷ், ஆனந்த் மற்றும் திருக்கோஷ்டியூர் காவல் ஆய்வாளர் செல்வராகவன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவு பேரில், திருப்பத்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி