திண்டுக்கல்: திண்டுக்கல், R.M.காலனி 8-வது தெரு பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத்(29). இவர் திண்டுக்கல் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டு இரவு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா