திண்டுக்கல்: திண்டுக்கல், பழனிரோடு முருகபவனம் பகுதியில் சகாயமேரி என்பவருக்கு சொந்தமான ஜவுளி கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.45 ஆயிரம் பணம், துணிகள் ஆகியவற்றை திருடி சென்றது தொடர்பாக நகர் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி.கார்த்திக் மேற்பார்வையில், நகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையில்,சப் இன்ஸ்பெக்டர் வீரபாண்டி, நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நிலக்கோட்டையை சேர்ந்த சிவபாண்டி(30). என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















