திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திண்டுக்கல் ரோடு பெட்ரோல் பங்க் அருகே உள்ள கடையை மர்ம நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளையடித்து சென்றது தொடர்பாக பழனி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து பழனி DSP.தனஞ்செயன் உத்தரவின் பேரில் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பாண்டிச்சேரி காரைக்கால், பச்சூரை சேர்ந்த குப்புசாமி மகன் செந்தில்குமார்(54). என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். செந்தில்குமார் மீது பாண்டிச்சேரி மாநிலம், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















