திருவள்ளூர்: T7 டேங்க் பேக்டரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொத்தூர் பகுதியில் இரண்டு வீடுகளில் நடந்த கன்னகளவு வழக்குகளில் தொடர்புடைய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேற்குவங்க மாநிலத்திற்கு தப்பிச்சென்று பதுங்கி இருந்த இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களான JALTAN SK (A/37), Helal SK (A/35). ஆய்வாளர் தலைமையிலான போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் சுமார் 30 லட்சம் மதிப்புள்ள 39.75 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.2,39,000/- ரொக்க பணம் பறிமுதல் செய்து நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர். மேற்குவங்க மாநில கொள்ளையர்கள் கைது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு