திண்டுக்கல்: திண்டுக்கல் எருமைகாரத் தெருவில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வாலிபர்களை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பிரதீப் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நகர் துணை கண்காணிப்பாளர். சிபின் மேற்பார்வையில், நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர். ராஜசேகர், சார்பு ஆய்வாளர். தாவுத் உசேன்,குற்றப்பிரிவு காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர்கள். வீரபாண்டியன், ஜார்ஜ் எட்வர்ட், காவல்துறையினர் ராதாகிருஷ்ணன், முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் பெரியகுளத்தைச் சேர்ந்த காமராஜ் மற்றும் (18). வயது சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா