திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், விருவீடு காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை காவலர் திரு.முனீஸ்வரன் அவர்கள் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஈட்டி எரிதல் போட்டியில் பங்கு பெற்று மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் பெற்றார். இதையடுத்து (23.02.2023) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் திரு.முனீஸ்வரன் அவர்களை நேரில் அழைத்து பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா