திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே கொங்கந்தான்பாறையில் கடந்த 2013 -ம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே, முன் விரோதம் காரணமாக வீரளபெருஞ்செல்வியை சேர்ந்த இசக்கிபாண்டி (23/13). என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருநெல்வேலி மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளிகளான பஞ்சாண்டி (எ) பேதுரு மணி (40). இன்பராஜ் (எ) எட்வர்ட் இன்பராஜ் (40). முத்துக்குமார் (38). ஆகிய மூவருக்கும் (07.11.2025) அன்று ஆயுள் தண்டனையும், தலா ரூ. 1,500/- அபராதமும் விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில், திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் , காவல் ஆய்வாளர், வேல்ராஜ், காவல் ஆய்வாளர், சந்திரசேகர் (தற்போது மானூர் காவல் நிலையம்) மற்றும் முன்னீர்பள்ளம் காவல்துறையினரையும், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N..சிலம்பரசன். இ.கா.பா, வெகுவாக பாராட்டினார். மாவட்ட காவல்துறையினரால் நிகழாண்டில் இதுவரை 23 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 75 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் சரித்திர பதிவேடு உடைய நபர்கள் பேர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















