திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காசாம்பட்டியை சேர்ந்த ஜோதி என்பவரை கடந்த 29-11-2022 அன்று வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபாகரன் என்பவரை நத்தம் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபாகரன் என்பவரின் குற்ற செயல்களை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், இ.ஆ.ப அவர்கள் பிரபாகரன் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
உத்தரவைத் தொடர்ந்து நத்தம் காவல் நிலைய போலீசார் பிரபாகரனை குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.