தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையில் கடந்த (20.03.2019) அன்று பேச்சியம்மாள் (68). என்பவரை கொலை செய்த வழக்கில் பேச்சியம்மாளின் உறவினரான நல்லகண்ணு (55). என்பவர் பசுவந்தனை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் (23.05.2025), அன்று குற்றவாளியான நல்லக்கண்ணுவிற்கு வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்து நீதிமன்றத்தில் சாட்சியங்களை விரைவாக சமர்பித்த அப்போதைய பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர், சண்முகவடிவு, (தற்போது திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம்) முதல் நிலை காவலர் கவிதா ஆகியோரையும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், இ.கா.ப., பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்