மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவல் நிலைய சரகம், திருவிழந்தூர், ஆஞ்சநேயர் கோவில் அருகே கடந்த (20.03.2024)ம் தேதி இரவு மயிலாடுதுறை கலைஞர் காலணியை சேர்ந்த 1.அஜித்குமார் (26). த/பெ. லோகநாதன், மற்றும் 2.சரவணன் (30). த/பெ. சுப்பிரமணியன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத சில நபர்கள் வழிமறித்து இருவரையும் அரிவாளால் தாக்கியதில் அஜித்குமார் சம்பவயிடத்தில் இறந்தும், அவருடன் வந்த சரவணன் என்பவருக்கு காயம் ஏற்பட்டது தொடர்பாக (21.03.2024)-ம் தேதி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் இந்த கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1.மில்கி (எ) சந்திரமோகன் (29). 2. சதீஷ் (22).3. ஸ்ரீராம் (26). 4. சந்திரமௌலி (24). 5. மோகன்தாஸ் (28. 6. பாலாஜி (29). ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டதின் பேரில், அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.