திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியை சேர்ந்த ரவி (22/12) என்பவருக்கும் வள்ளியூர், ஊற்றடி, கிழக்கு தெருவை சேர்ந்த முருகன் (55). என்பவருக்கும் வள்ளியூர் பகுதியில் உள்ள சுடலை மாடசாமி கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக (08.09.2012) அன்று இரவு வள்ளியூர் பழைய பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த ரவியை முருகன் மற்றும் அவருடைய நண்பர்களான வள்ளியூர் பகுதியை சேர்ந்த மாணிக்கராஜ் (39). தெற்கு வள்ளியூர், அம்மச்சி கோவில் தெருவை சேர்ந்த முருகன் (50). தெற்கு வள்ளியூர், கீழ்குளத்தை சேர்ந்த அம்ஜத் குமார் (42). ஆகியோர் சேர்ந்து கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர். இது குறித்து வள்ளியூர் காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவ்வழக்கு விசாரணையின் தீர்ப்பாக குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதையடுத்து , வள்ளியூர் காவல்துறையினர் இவ்வழக்கை மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் (28.10.2024) அன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் கார்த்திகேயன், பூர்ணிமா, ஆகியோர் மாணிக்கராஜ், முருகன், அம்ஜத் குமார், முருகன் ஆகிய நால்வருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்பளித்துள்ளனர்.இவ்வழக்கு விசாரணையில் திறம்பட செயலாற்றி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த வள்ளியூர் காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்