திருநெல்வேலி : திருநெல்வேலி தச்சநல்லூர், கரையிருப்பைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துக்குமரன் என்ற குமரேசன்(43). இவர், கடந்த டிசம்பர் மாதம் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த, அவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், மரு.சி.மதன், இ.கா.ப.,(மேற்கு) காவல் ஆணையருக்கு பரிந்துரைத்தார். அதன் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், நெ.மணிவண்ணன், இ.கா.ப., பிறப்பித்த உத்தரவுப்படி, குமரேசனை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















