திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பிரம்ம தேசத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு சண்முகவேல் (60/19). என்பவர் அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரை முன்விரோதத்தில் கொலை செய்து, அவரின் சகோதரியையும் கொலை முயற்சி செய்தது தொடர்பாக, வழக்கு பதியப்பட்டு திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றம் குற்றவாளி சண்முகவேலுக்கு (08.10.2025) அன்று ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
நீதிமன்றத்தில் இவ்வழக்கில், திறம்பட சாட்சிகளை ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த அம்பாசமுத்திரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார், காவல் ஆய்வாளர், சண்முகவேல், காவல் ஆய்வாளர் பிரதாபன்,(தற்போது DSP. SJ&HR) மற்றும் அம்பாசமுத்திரம் காவல்துறையினரையும், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப.,. பாராட்டினார். மாவட்ட காவல்துறையினரால் நிகழாண்டில் இதுவரை 22 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 72 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் சரித்திர பதிவேடு உடைய நபர்கள் 22 பேர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்