நெல்லை: நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பந்தல் மேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் 32.அதே பகுதியில் வசிக்கும் ஐயப்பன் 33.இவர்கள் இருவரும் உறவினர்கள். நிலத்தகராறு காரணமாக நேற்று முன்தினம் சரவணனை, ஐயப்பன் வெட்டி படுகொலை செய்தார்.
இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து அய்யப்பன் உள்பட 7 பேரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் கொலை தொடர்பாக பத்ரகாந்த் (19), வேலுச்சாமி என்ற துரை 39 உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடிவருகிறார்கள்.