திருநெல்வேலி: திசையன்விளை, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திசையன்விளை, கக்கன் நகரை சேர்ந்த மதிராஜன் மற்றும் மதியழகன் ஆகியோரை அதே பகுதியைச் சேர்ந்த சுடலைமணி என்பவரின் மகன்கள் ராஜ்குமார் (28). வெவின்குமார்(26). அருண்குமார் என்ற பருண்குமார்(20) மற்றும் சிலர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக (17.08.2024) அன்று கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து திசையன்விளை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டகுற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி குற்றவாளிகளான ராஜ்குமார், வெவின்குமார், அருண்குமார் என்ற பருண்குமார் ஆகிய மூவர் மீது திசையன்விளை காவல் ஆய்வாளர், சீதாலட்சுமி குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.,இ.கா.ப.,க்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் (17.09.2024) இன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்