திண்டுக்கல்: திண்டுக்கல், ராஜக்காபட்டி, மணியக்காரன்பட்டி ரோடு முத்தாலம்மன் கோவில் பூஞ்சோலை புளியமரம் அருகே கடந்த 3-ம் தேதி பாஜக பிரமுகர் பாலகிருஷ்ணனை பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்த வழக்கில் சாணார்பட்டி போலீசார் கஜேந்திரன்(23). மோகன்ராஜ்(21). கணேஷ்குமார்(33). உள்ளிட்ட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கஜேந்திரன்(23).மோகன்ராஜ்(21). கணேஷ்குமார்(33). ஆகிய 3 பேரின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு S.P.பிரதீப் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் சரவணன் அவர்கள், 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா