தென்காசி : தென்காசி மாவட்டம். சேர்ந்தமரம், அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் முருகசெல்வி (42). பீடிசுற்றும் வேலை செய்து வந்துள்ளார். இவரது கணவர் கடந்த ஆறு ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். முருகசெல்வி தனது வீட்டில் மகளுடன் தனியாக வசித்து வந்த நிலையில்
(02.01.2026) அன்று காலை சுமார் 07.30 மணியளவில், தனது வீட்டின் வெளியே உள்ள குளியலறையில் இறந்த நிலையில் கிடப்பதாகவும், அவரது கழுத்தில் இருந்த நான்கு சவரன் தாலி சங்கிலியை காணவில்லை என பெறப்பட்ட புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக கொலையாளியை விரைந்து கைது செய்ய திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து, துரிதமாக விசாரணை மேற்கொண்டு, கொலையில் ஈடுபட்ட வடநத்தம்பட்டியை சேர்ந்த சரத் (24). என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் திருடப்பட்ட நான்கு சவரன் தாலி சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டு, அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















