திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் கடந்த 2021 ஆம் ஆண்டு கோவில் திருவிழா நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் சீவலப்பேரியை சேர்ந்த பூசாரி சிதம்பரம் (எ) துரையை (41). அதே பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளான தங்கப்பாண்டி (29). பேச்சு குட்டி (29). முருகன் (24). ஆகியோர் கொலை செய்த வழக்கு திருநெல்வேலி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதால் நீதிமன்றம் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர விரைவாக செயல்பட்ட திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், ரகுபதி ராஜா, சீவலப்பேரி காவல் ஆய்வாளர், சுபாஷ், காவல் ஆய்வாளர், பெருமாள் (தற்போது தென்காசி மாவட்டம்) பெண் தலைமை காவலர் முத்துலட்சுமி, மற்றும் சீவலப்பேரி காவல்துறையினரையும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. V. பிரசன்ன குமார் இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















