திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கூத்தங்குழி புனித மிக்கேல் அதிதூதர் கோயில் திருவிழாவில் வெடி போட்டது சம்பந்தமாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு கொலை நடந்தது. இது குறித்து கூடங்குளம் காவல் நிலைய ஆய்வாளர், சியாம் சுந்தர் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ராஜ் (19). பிராங்கிளின் (50). சர்லின்(42). பிரகாசி(35). சௌமியா (29). ஆகிய 5 நபர்களை (03.09.2024) அன்று கைது செய்தார். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான ரகுமான்(36). ஆஞ்சிலோ(36). ஜூலியஸ்(40). அஜய்(33). ரோஜன்(31). செல்வா(22). கில்பர்ட் (55). பார்த்திபன் (31). ஆகிய 8 நபர்களையும் (04.09.2024) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்