திருநெல்வேலி : திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவா் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜிலி (60). இவர், கடந்த 18 ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையின் தீவிர விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி என்ற தௌபிக் கைது செய்யப்பட்டார். அவரது சகோதரர் கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவ்வழக்கு தொடர்பாக திருநெல்வேலி நகரத்தைச் சேர்ந்த பிளஸ் 1 பயிலும் மாணவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பிஜிலி வரும் நேரம் குறித்து தௌபிக் தரப்பினருக்கு தகவலளித்தது, விசாரணையில் தெரியவந்ததால் அவரை கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இதற்கிடையில் தலைமறைவாக உள்ள தௌபிக்கின் மனைவி நூர்நிஷாவை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்