திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பொட்டல் காலனி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (23). இவருக்கும், மன்னார்கோவில் வேம்படி தெருவைச் சேர்ந்த இசக்கி மகள் இஷா என்பவருக்கும் 2016இல் திருமணம் நடைபெற்று கருத்துவேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பொட்டல் காலனியில் 2017 ஆம் ஆண்டு வெற்றிவேல் கொலை செய்யப்பட்டார். இது குறித்து முக்கூடல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இஷா, அவரது தாய் சுடலை மாடி(61). உறவினர்களான இஷா(35). சீதாராமன்(43). சுடலைமாடி, மாரிமுத்து (37). ஜெகதீஷ் (32). உள்ளிட்டோரை கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, விசாரித்த நீதிமன்றம் மாரிமுத்து, ஜெகதீஷ் ஆகியோருக்கு கொலை குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், மேலும் இரு பிரிவுகளுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.17,000 அபராதமும் விதித்து, தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. மேலும் சுடலை மாடி, இஷா, சீதாராமன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















