இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட பரமக்குடி அருகே உள்ள தென்பொதுவக்குடி பகுதியில் ரமேஷ் என்பவரை கொலை செய்த குற்றவாளிகள் மீது பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரணை செய்த இராமநாதபுரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பாலா@பரம்பை பாலா, வேலுச்சாமி திருமுருகன் மற்றும் கருணாகரன் ஆகிய நால்வருக்கு ஆயுள் தண்டனையும் தவமணி என்பவருக்கும் 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மகேந்திரன், சுரேஷ்குமார் ஆகிய இருவருக்கும் 5ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்கள். இராமநாதபுரம் மாவட்டத்தில் கொலை மற்றும் கொள்ளை போன்ற வழக்குகளில் நீதிமன்ற விசாரணைகளுக்காக தனிக்குழு அமைக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்று தரப்படுகிறது. மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G.சந்தீஷ் ஐ.பி.எஸ்., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்
















