கள்ளக்குறிச்சி : கடந்த (28.12.2023)-ந் தேதி திருக்கோவிலூர் to சந்தபேட்டை செல்லும் சாலையில் கீரனூர் கிராம பகுதியில் விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த செம்மலை மகன் சிவா(33). என்பவர் வெட்டுப்பட்டு இறந்து கிடப்பதாக கிடைத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சமய் சிங் மீனா இ.கா.ப,. அவர்கள் சம்பவயிடம் சென்று பார்வையிட்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மனோஜ்குமார் மேற்பார்வையில் திருக்கோவிலூர் காவல் வட்ட ஆய்வாளர் திரு.பாலாஜி தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
அதன்படி தனிப்படை காவல்துறையினர் இறந்துபோன சிவாவிடம் கடைசியாக பேசிய அவரது நண்பரான திருக்கோவிலூர், தெப்பக்குளத்தெருவைச் சேர்ந்த சேகர் மகன் பரணிதரன்(29). என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் பரணிதரன் சென்னை, புளியந்தோப்பைச் சேர்ந்த ரகுராமன் மகன் ரீகன் @ சந்தோஷ் குமார்(23). சரவணன் மகன் நவீன்(20). மற்றும் திருக்கோவிலூர், தேவியகரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் ஜெகநாதன்(29). ஆகிய நண்பர்களின் உதவியுடன் சிவாவை வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெள்ளத் தெளிவாக தெரியவந்ததை அடுத்து நான்கு நபர்களையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து மேற்சொன்ன கொலை சம்பவத்தின் போது அவர்கள் பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.