திருநெல்வேலி : திருநெல்வேலி டவுன், தொட்டிபால தெருவைச் சேர்ந்த ஜாஹிர் உசேன் பிஜிலி என்பவரை நிலப் பிரச்சினை காரணமாக, பொது இடத்தில் வெட்டி கொலை செய்த வழக்கில் எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட சங்கரன் மகன் கிருஷ்ணமூர்த்தி என்ற முகம்மது தௌபிக்(35). மகபூப் ஜான் மகன்கள் அக்பர்ஷா(33). பீர் முகம்மது(37 ). சங்கரன் மகன் கார்த்திக் என்ற அலிஷேக்(32). ஆகியோரை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர்கள், V.கீதா, V.வினோத் சாந்தாராம், பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப, ஆணைப்படி நான்கு பேரும் (16.04.2025) – அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட முகமது தவ்பிக் @ என்ற கிருஷ்ணமூர்த்தி மனைவி நூருன் நிஷாவை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்