திண்டுக்கல் : திண்டுக்கல் அகஸ்தியர் தெப்பம் அருகே வாலிபரை ஓட ஓட விரட்டி கொலை செய்த வழக்கு தொடர்பாக
எஸ்.பி.பாஸ்கரன் உத்தரவின் நகர் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் தலைமையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் மற்றும் காவலர்கள் முத்தழகுபட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கொலை வழக்கில் தொடர்புடைய முகேஷ்குமார் மற்றும் வெஸ்லின் அபிஷேக் ஆகிய 2 பேர் காவல்துறையினர் கண்டதும் ஓடிச் சென்று தடுமாறி கீழே விழுந்து காலில் அடிபட்டது. உடனடியாக காவல்துறையினர் மனிதாபிமான அடிப்படையில் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா