திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக சதீஷ் (எ) சக்திவேல் என்பவர் கொலை செய்யப்பட்டது. தொடர்பாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் விசாரணையானது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றசெயலில் ஈடுபட்ட குற்றவாளியான முத்துப்பாண்டி என்பவருக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 1,000/- அபராதம் விதித்து (30.10.2025) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 
                                











 
			 
		    



